முகப்புகோலிவுட்

வாய்ப்பு தவறினாலும் வாழ்க்கையே மாற்றிக்கொண்ட ‘லேடி சூப்பர் ஸ்டார்’.! சுவாரஸ்யமான உண்மையை பகிர்ந்த பார்த்திபன்..

  | June 25, 2020 18:28 IST
Nayathara

நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் பார்த்த்பன் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

‘லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் தமிழ் திரையுலகில் தற்போது உள்ள லீடிங் கதாநாயகிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நயன்தாரா. ஆரம்ப நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் கதையில் ஒரு நாயகியாக மாறி அதன் பிறகு கதையின் நாயகியாக மாறியவர். பல மொழிகளில் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார். அண்மைக் காலமாக இவர் பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

n83q8268

இந்நிலையில், நயதாராவைப் பற்றி பலரும் அறிந்திராத ஒரு சுவார்ஸ்யமான தகவலை பார்த்திபன் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் தனது தனித்துவமான திரைப்படங்கள் மற்றும் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்துடன் பிரபலமானவராக அறியப்படுகிறார். ஹவுஸ்ஃபுல், இவன், புதிய பாதை, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கியதற்காக அறியப்பட்ட அவர், சமீபத்தில் தான் ஒருவர் மட்டுமே, எழுதி, இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படத்தின் மூலம் உலகளவில் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தார்.

பார்த்திபன் 2004-ஆம் ஆண்டில் ‘குடைக்குள் மழை' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். ஆரம்பத்தில் தற்போதைய டாப் நடிகை நயன்தாரா தான் இப்படத்தின் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளார், ஆனால் அந்த நேரத்தில் நயன்தாராவல் அவரை வந்து சந்திக்க முடியாமல் போனதால், மதுமிதாவை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளார்.

khgn23m8

நயன்தாரா பின்னர் 2005-ல் வெளியான அய்யா படத்தில் அறிமுகமானார், இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். பார்த்திபன் ஒரு சமீபத்திய பேட்டியில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார், மேலும் நயன்தாராவின் வளர்ச்சிக்கு மகிழ்ச்சியடைவதாகவும், அவர் குடைக்குள் மழையில் நடித்திருந்தால், இதெல்லாம் நடந்திருக்காது என்றும் கூறினார். நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்' படத்தில் பார்த்த்பன் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் இப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், ஒரு வலைத் தொடர் மற்றும் இன்னும் சில சுவாரஸ்யமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஒரு முயற்சியாக ஒரு ஷாட் (Single Shot) திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராகிவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com