முகப்புகோலிவுட்

மணிரத்னத்தின் ‘நவரசா’வில் இணையும் பிரபல மலையாள நடிகர்.?

  | July 21, 2020 19:12 IST
Fahadh Faasil

ஃபஹத் முன்னதாக வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ் படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

கவுதம் வாசுதேவ் மேனன், ஜெயேந்திரா, சுதா கொங்கரா மற்றும் பல பிரபல இயக்குநர்களை உள்ளடக்கிய ‘நவரசா' என்ற வலைத் தொடரை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கவுள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்தது.

இந்த வலைத் தொடரில் விஜய் சேதுபதி, சூர்யா, ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும், நடிகர்கள் அரவிந்த் சுவாமி, சித்தார்த் ஆகியோரும் இந்த படத்தின் பகுதிகளை இயக்கவுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இப்போது, பிரபல மலையாள ஃபஹத் பாசில் இந்தத் தொடரின் ஒரு பிரிவில் நடிக்க கையெழுத்திடவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபஹத் முன்பு வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ் படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com