முகப்புகோலிவுட்

“ஜிப்ஸி” திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை சொன்ன நடிகர் ஜீவா

  | January 24, 2019 18:08 IST
Jiiva

துனுக்குகள்

  • ஜிப்ஸி திரைப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்
  • யுகபாரதி இப்படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறார்
  • சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கும் திரைப்படம் “ஜிப்ஸி”. இப்படத்தை ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ். அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.   'ஜிப்ஸி' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா நேற்று சென்னையில்  நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத்குமார், இயக்குநர் ராஜுமுருகன், பாடலாசிரியர் யுகபாரதி, படத்தின் நாயகன் நடிகர் ஜீவா, ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத் தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா,  ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ஜீவா படம் குறித்து பேசும்போது,
 
"நாட்டுப்புற பாடகர் ஒருவர் இந்தியா முழுவதும் சுற்றித் திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுவதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது.” என்று இந்த படத்தின் கதையை ஒருவரியில் இயக்குநர் ராஜுமுருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது.
 
அதிலும் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. கதையில் ஒரு உண்மை இருந்தது. மனித நேயத்தை மதிக்க வேண்டும், இயற்கையை கொண்டாட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் கதை இது. இந்தியா முழுவதும் பயணிக்கும் போது தான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதையும் இந்த படம் உணர்த்தும். எல்லா மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றுதான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
 
படம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்திருக்கிறது. அதன் பெயர் “சே” இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றம் ஒன்றையும் இயக்குநர் உருவாக்கியிருந்தார். இது போன்ற ஒரு கதையை சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டோம். இதனை துணிந்து எடுத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி. கற்றது தமிழ், ஈ போன்ற படங்களுக்கு பிறகு அதுபோன்ற கதைகளில் ஏன் நடிப்பதில்லை? என்ற கேள்விக்கு நடிகர் ஜீவா இவ்வாறு பதிலளித்தார். 

இந்த கதையை கேட்டதால் இந்த கதையின் மீது நம்பிக்கை வந்தது. நாகூர்,வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்தியா முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம். இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு அதிர்ஷ்டசாலியான நடிகர் என்று அனைவரும் கூறுவார்கள். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படம் என்னுடைய கலையுலக பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும்” என்றார். நேற்று இப்படத்தின் வெரி வெரி பேட் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  
 
இந்த படத்திற்கு இசைஅமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார், நடிகை நட்டாஷா ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்