இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தைரியம், நம்பிக்கை உருவகமாக நினைவு கூறப்படுபவர் டி.என்.சேஷன் என்றும், தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் என்றும் குறிப்பிட்டு தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
TN Seshan will be remembered as an embodiment of courage & conviction. It was he who brought the powerful role of the “Election Commission” into the drawing room discussion of the Common Man.
— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2019
இயக்குநர் பி.எஸ். மித்ரன் “இந்திய அரசியலின் குற்றமயமாக்கலைக் கட்டுப்படுத்தியவர். ஜனநாயகத்தின் உண்மையான பாதுகாவலர்!” என்று பதிவிட்டிருக்கிறார்” இவர்களைத் தொடர்ந்து பல்வேறு ஆளுமைகளும் இவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.