முகப்புகோலிவுட்

நடிகர் கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம்!பிரபலங்கள் வாழ்த்து

  | November 19, 2019 15:09 IST
Kamal Haasan

துனுக்குகள்

  • 60 ஆண்டுகாலமாய் கமல் திரைத்துறையில் இருக்கிறார்
  • கமலுக்கு 65வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது
  • தற்போது அவருக்கு டாக்ட்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். 65 வயதாகும் கமல்ஹாசன் திரைத்துறையை 60 ஆண்டுகளாக கட்டி ஆண்டு வருகிறார்.

இவரது 65தாவது பிறந்த நாள் விழாவும், 60 ம் ஆண்டு திரைப்பயணத்தையும் கொண்டாடும் வகையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றய முந்தைய தினம் திரைக்கலைஞர்கள் அனைவரும் கலந்துக்கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கமலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றும் இவருக்கு ஏற்கனவே பல விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஒடிஷா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தலைவர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்