முகப்புகோலிவுட்

'நான் வந்துட்டேன்னு சொல்லு' - புதிய அவதாரம் எடுக்கும் கமல்ஹாசன்

  | February 06, 2020 16:29 IST
Kamalhassan

கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்

கமல்ஹாசன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன், சினிமாவை இவரை விட அதிகமாக நேசித்தவர்கள் இங்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு மட்டும் இன்றி தொழில்நுட்ப ரீதியாகவும் தலைசிறந்து விளங்கும் ஒரு நடிகர். இவரை நடிகன் என்ற வட்டத்திற்கு அடுக்குவது கடினம் என்பது அவரது ரசிகர்களின் பொதுவான கருத்து.

தேவர் மகன், குருதிப் புனல், பேசும் படம், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி என்று இவர் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல தொழில்நுட்ப சிறப்புகளை கொண்டது. அனுதினம் தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கமல்ஹாசன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ஆம் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். 'ஹாஸ்டேஜஸ்', 'ரோர் ஆப் தி லயன்', 'நச் பலியே' உள்ளிட்ட இணைய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கும் நிறுவனம் தான் பனிஜாய் ஏஷியா.

தற்போது இந்த நிறுவனம், டர்மரிக் மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து அனைத்து மாநில மொழிகளில் இணையதளங்களுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களுடன் தான் கமல் இணையவுள்ளார். விரைவில் இதுகுறித்த பல தகவல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்