முகப்புகோலிவுட்

நடிகர் கருணாஸுக்கு கொரோனா தொற்று..!

  | August 05, 2020 19:01 IST
Karunas

தற்போது அவர் திண்டுக்கலில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நடிகர் கருணாஸ் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்சுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. நேர்மறை சோதனைக்குப் பிறகு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கருணாஸுடன் பணிபுரிந்த பாதுகாப்பு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர், நடிகர் கொரோனா நோய்த்தொற்றுக்கான Swab பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது அவர் திண்டுக்கலில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இயக்குநர் பாலாவின் ‘நந்தா' படத்தில் ‘லொடுக்கு பாண்டி'யாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய கருணாஸ், வில்லன், புதிய கீதை, திருடா திருடி, குத்து, திண்டுக்கல் சாரதி போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்போது அவர் திருவாடானை தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com