முகப்புகோலிவுட்

பரியேறும் பெருமாள் கதிர் நடிக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம்

  | February 14, 2019 13:01 IST
Kathir

துனுக்குகள்

 • கதிர் சமீபத்தில் சிகை படத்தில் நடித்திருந்தார்
 • தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
 • சத்ரு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் கதிர்
இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில், ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டெர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில், ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு'. இந்த படத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கி நடிக்கிறார்.
 
‘ராட்டினம்' படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய இசையமைக்கிறார் அம்ரிஷ். பாடல்களை கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ.
 
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் நவீன் நஞ்சுண்டான் பேசுகையில்,
“இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படம். விறு விறுப்பான திரைக்கதை கொண்ட படம். இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார்.
 
தரமான மற்றும் வெற்றி படங்களான ‘மரகத நாணயம்', ‘ராட்சசன்' என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு ‘சத்ரு' படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் திரைக்கதை..!” இந்தப் படத்தில் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com