முகப்புகோலிவுட்

நடிகர் கொட்டாச்சியின் அடுத்த இயக்கம் ‘இறை மகன்’- வெளியானது ஃபர்ஸ்ட் லுக்.!

  | September 22, 2020 19:01 IST
Kottachi

ஏற்கனவே ‘வறண்ட விழிகள்’ & ‘வலியும் வழியும்’ ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பெரிய அளவிலான நட்சத்திரமாக திகழவில்லை என்றாலும், ரசிகர்கள் பார்த்தவுடன் சட்டென்று யூகிக்கும் நடிகர் நடிகைகள் ஏராளம். அந்த வகையில் 1990களின் இறுதியில் இருந்தே விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் தான் கொட்டாச்சி. விவேக் அவர்களுடன் இணைந்து பல படங்களின் இவர் காமெடி கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமாக இவர் பேசப்படவில்லை என்றபோது தற்போதுவரை சிறந்த நகைச்சுவை நடிகராக கலக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இவருடைய செல்ல மகள் சினிமா பிரவேசம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் படத்தின் மூலம் இவர் குட்டி நயன்தாராவாக களமிறங்கி சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சில படங்களில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரமாக திகழ்கிறார்  மானஸ்வி. தற்போது விளம்பரப்படங்களிலும் நடிக்க தொடங்கியள்ளார்.

தற்போது ஊரடங்கு தளர்வு பெற்று திரைப்பட படப்பிடிப்புகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் கொட்டாச்சி ஒரு புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். இயக்குநராக களமிறங்கி இருக்கும் கொட்டாச்சியின் 'வலியும் வழியும்' என்ற குறும்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ஏற்கனவே ‘வறண்ட விழிகள்' & ‘வலியும் வழியும்' ஆகிய குறும்படங்களை இயக்கிய அவர் தற்போது தனது மூன்றாவது இயக்கமாக ‘இறை மகன்' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com