முகப்புகோலிவுட்

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கோவை செந்தில் காலமானார்

  | September 10, 2018 13:23 IST
Kovai Senthil

துனுக்குகள்

 • பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில்
 • நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்
 • உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பள்ளிப் பாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. விவசாய குடும்ப பின்புலத்தை கொண்ட இவர், வங்கியில் பணிபுரிந்து வந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததும் வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரைப்படங்களில் முழுநேரமாக `கோவை செந்தில்' என்ற பெயரில் நடிக்கத் துவங்கினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு, 2016ம் ஆண்டு சென்னையில் ஒரு விபத்து ஏற்பட்டது. இதில் உடன் பயணித்த நடிகர் செல்வகுமார் இறந்தார், காயமடைந்த கோவை செந்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகு உடல்நலம் குன்றியே காணப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதால் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோவை செந்திலுக்கு லட்சுமி என்ற மனைவி, மகன் திலக், மகள் பொன்மணி ஆகியோர் உள்ளனர். இவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com