முகப்புகோலிவுட்

தமிழ்நாடு போலீஸைப் பாராட்டிய நடிகர் மாதவன்..!

  | March 27, 2020 13:13 IST
Madhavan

மாதவன் தற்போது ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலரும் நிலைமை புரியாமல் பொறுபாற்று வெளியே வாகனங்களில் சென்றுவருகின்றனர். அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகளிடம் கைக்கூப்பி கெஞ்சிய ஒரு போக்குவரத்து போலீஸ்காரரின் முயற்சியை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக காவல்துறையினர் எல்லாவற்றையும் பணயம் வைத்து, நம்முடைய சில முட்டாள் சகோதரர்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். இந்த போலீஸ்காரர்களுக்கு நான் மிகவும் அன்பு, மரியாதை மற்றும் நன்றியை தெரிவிக்கிறேன். தமிழ்நாடு காவல்துறைக்கு வணக்கங்கள். நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

மாதவன் தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளி பொறியியலாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற படத்தை இயக்கியுள்ளார். ஒரு அப்பாவி விஞ்ஞானி உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டதும் அதன் பின்விளைவுகளும் பற்றிய கதையாகும்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்