முகப்புகோலிவுட்

பிறந்தநாளில் அப்பாவாகும் மகிழ்ச்சியை பகிர்ந்த நகுல்..!

  | June 15, 2020 21:22 IST
Nakkhul

இந்த ஜோடி 2016-ல் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

2003-ஆம் ஆண்டு வெளியான சங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன் பிறகு தெலுங்கில் Keelu Gurram ஏமாற்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தில் மூலம் நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். அதையடுத்து மாசிலாமணி, கந்தக்கோட்டை, நல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா டாட்காம், செய் போன்ற படங்களில் நடித்த அவர் தற்போது, எரியும் கண்ணாடி திரைப்படத்தில் சுனைனாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது நிலவும் ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தனது குடும்பத்துடன் வீட்டில் நேரத்தை செலவழித்துவரும் நடிகர் நகுல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

இந்நிலையில், இன்று தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நகுல் மேலும் ஒரு சிறப்பான செய்தியை பொதுவெளியில் பகிர்ந்துகொண்டார். அதாவது அவர் தந்தையாகவுள்ள மகிழ்ச்சியான செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும், அவரது மனைவி ஸ்ருதியுடன் ஒரு புகைப்படத்தையும், இருவரும்  தங்கள் செல்ல நாயை அன்பாக வைத்திருக்கும் புகைப்படத்தையும் நகுல் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடி 2016-ல் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com