முகப்புகோலிவுட்

‘தல’யுடன் நடிக்கவேண்டும், ‘தளபதி’யுடன் மனவருத்தம்- மனம் திறந்த மூத்த நடிகர்..!

  | July 03, 2020 16:15 IST
Napoleon

விஜய்யின் படங்களைக் கூட பார்ப்பதில்லை என்றும் எனவே அவரைப் பற்றி தன்னால் எதுவும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான நெப்போலியன் அண்மையில் அளித்த பேட்டியில் தல அஜித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் எந்த எதிர்மறையான பாத்திரங்களையும் செய்ய விரும்பவில்லை என்றும், ஒரு நேர்மறையான அல்லது குணச்சித்திர கதாபாத்திர பாத்திரத்தில் நடிப்பதை விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நடிகர் அரசியல்வாதியாக மாறும்போது, மக்கள் அந்த நபரின் கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள், எனவே அவருக்கு எதிர்மறையான பாத்திரங்களை வழங்கும் படங்களில் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.

சிவகார்த்திகேயன், விஜய், கார்த்தி போன்ற நடிகர்களின் இளம் ஹீரோக்களுடன் நடித்துள்ளதாகக் கூறிய அவர், அஜித்துடன் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், அவருடன் ஒரு திரைப்படத்திலாவது அணிசேர விரும்புகிறேன் என்றும் கூறினார்.

அதையடுத்து, கமல்ஹாசனுடன் பணிபுரிந்த தனது அனுபவத்தை நினைவு கூர்ந்த அவர், நடிப்பில் அவரை வெல்ல முடியாது என்றும், கமலுடன் பணிபுரியும் போது, அவருக்குப் பிறகு இரண்டாவது சிறந்த நடிப்பு தன்னுடையதாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவும் தெரிவித்தார்.

நடிகர்-இயக்குநர் பிரபுதேவாவை இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று வர்ணித்து, அவருடனான நல்லுறவின் காரனமாக, அவர் இயக்கத்தில் விஜய்யுடன் ‘போக்கிரி' திரைப்படத்தில் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். ஆனால், நெப்போலியன் இந்த படத்தின் படப்பிடிப்பில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அதன்பிறகு விஜய்யின் படங்களைக் கூட பார்ப்பதில்லை என்றும் எனவே அவரைப் பற்றியோ அல்லது அவரது படங்களைப் பற்றியோ தன்னால் எதுவும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com