முகப்புகோலிவுட்

'வெயிட்ட கொறச்சுட்டேன்' - 'Andhadhun' ரீமேக்கில் களமிறங்கும் பிரசாந்த்

  | February 17, 2020 15:00 IST
Andha Dhun

நடிகர் பிரசாந்த் சுமார் 20 கிலோவுக்கும் மேல் உடல் எடையை குறைத்துள்ளார்.

துனுக்குகள்

 • 'Andhadhun' ரீமேக்கில் களமிறங்கும் பிரசாந்த்
 • இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது
 • மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி ஒரு ரீஎண்ட்ரியை கொடுத்துள்ளார்
தமிழ் திரையுலகில் நடனம், சண்டை பயிற்சி, குதிரை சவாரி போன்ற பலவற்றை முறையாக கற்றுக்கொண்டு நடிக்கும் நடிகர்கள் பலரில் பிரசாந்தும் ஒருவர். 1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே காதல் நாயகனாக உருவெடுத்தார்.

கல்லூரி வாசல், ஜீன்ஸ், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும் என்று தமிழ் திரையுலகை இவர் ஆட்சி செய்த காலமும் உண்டு. 2006ம் ஆண்டுக்கு பிறகு படங்கள் நடிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டாத பிரசாந்த், அண்மைக்காலமாக மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி ஒரு ரீஎண்ட்ரியை கொடுத்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் 2018ம் ஆண்டு வெளியான 'அந்தாதூன்' என்ற படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ள நிலையில், மோகன் ராஜா இந்த படத்தை இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக நடிகர் பிரசாந்த் சுமார் 20 கிலோவுக்கும் மேல் உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com