முகப்புகோலிவுட்

'சீக்கிரமே டும் டும் டும்..!!' - ராணா டகுபதியின் திருமண தேதி அறிவிப்பு..?

  | June 02, 2020 07:37 IST
Rana Daggubati

துனுக்குகள்

 • அண்மையில் தனது திருமண் குறித்து மனம் திறந்த ராணா
 • மிஹீகா பஜாஜ் என்பவரை மணக்க உள்ளதாக அறிவித்தார்
 • செய்தியாளர்களை சந்தித்த ராணாவின் தந்தை வருகின்ற
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகனாக சென்னையில் பிறந்தவர் தான் பிரபல 
நடிகர் ராணா தகுபதி. 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் அவர் நேரடியாக ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை தயாரித்தது AVM productions நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராணா 2015ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் பல்லாளதேவனாக வந்து பலரை ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார். அந்த படத்தின் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. 

இந்நிலையால் அண்மையில் தனது திருமண் குறித்து மனம் திறந்த ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை மணக்க உள்ளதாக அறிவித்தார். அவர் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர் ஆவார். தங்களது காதலை அறிவித்த ராணா தற்போது அனைவருக்கும் அடுத்த அப்டேட் கொடுத்துள்ளார். 

தற்போது சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ராணாவின் தந்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி திருமணம் நடைபெறும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நட்சத்திரங்களை அழைத்து திருமணத்தை வெகு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com