முகப்புகோலிவுட்

காவி சாயத்திற்கு திருவள்ளூவரும் சிக்கமாட்டார் நானும் சிக்க மாட்டேன்!- பா.ஜ.க-வுக்கு ரஜினி பன்ச்!

  | November 08, 2019 13:58 IST
Rajinikanth

துனுக்குகள்

  • திருவள்ளூவருக்கு காவி உடை அணிவித்தது குறித்து ரஜனி கருத்து
  • கே.பாலசந்தர் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது
  • உள்ளாட்சி தேர்தலில் ரஜினி கட்சி போட்டியிடவிலை என்பது உறுதி

கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய ரஜினி காந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சமீபத்தில் தமிழ்நாட்டில் அய்யன் திருவள்ளூவருக்கு காவி சாயம் பூசும் சர்ச்சை குறித்தும். பா.ஜ.க யினரின் சந்திப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பதிலலித்த ரஜினிகாந்த்,

"திருவள்ளூவர் ஒரு ஞானி, சித்தர், ஞானியும் சித்தரும் மதம், சாதிக்கும் அப்பார்பட்டவர்கள். திருவள்ளுவர்  கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது அவருடைய குறளில் அவர் பதிவு செய்திருக்கிறார் அதை யாரும் மறுக்கமுடியாது, மறைக்கவும் முடியாது.

பா.ஜ.க அலுவலகத்தில் அவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களுடைய தனிபட்ட விருப்பம். ஆனால் எல்லா இடங்களிலும் அவருக்கு காவி சாயம் பூச நினைப்பது அதை சர்ச்சையாக்குவது தேவையில்லாத ஒன்று. பி.ஜே.யிடம் இருந்து எனக்கு எந்த அழைப்பு வரவில்லை. என்னை பா.ஜ.க-வின் உறுப்பினராக மாற்ற நினைக்கிறார்கள். திருவள்ளூவரைப் போல எனக்கும் காவி சாயம் பூச நினைக்கிறார்கள் அதில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன். வருகின்ற உள்ளாட்சி தேர்லில் எங்கள் கட்சி போட்டியிடாது” என்று கூறினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்