முகப்புகோலிவுட்

ஆண்மீக பயணத்தை முடித்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!

  | October 18, 2019 17:10 IST
Rajinikanth

'DARBAR'இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

துனுக்குகள்

 • இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்
 • சென்னை திரும்பியதும் தர்பார் படத்தின் டப்பிங் வேலையில் ஈடுபடவுள்ளார் இவர்
 • ரஜினி அடுத்த நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர் ரஜீனிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜீனி காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மும்பையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, கடந்த 13-ந்தேதி இமயமலைக்கு ஆண்மீக பயணத்திற்கு புறப்பட்டார். உடன் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுசையும் உடன் அழைத்துச் சென்றார்.
 
சென்னையில் இருந்து விமானத்தில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்ற அவர், அங்கிருந்து காரில் ரிஷிகேஷ் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து, கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி, சுவாமி களின் சமாதியில் தியானம் செய்தார். தொடர்ந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் சென்று, தரிசனம் செய்தார்.
 
நேற்று பாபாஜி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு தியானம், வழிபாடு மேற்கொண்ட பிறகு. உத்தரகாண்டிலேயே நேற்று இரவு தங்கிய ரஜினி, தனது 5 நாள் இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று சென்னை திரும்புகிறார். விரைவில், ‘தர்பார்' படத்தின் டப்பிங் வேலைகள் மற்றும் சிவா இயக்க உள்ள புதிய படத்தில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
 
இமயமலையில், அவரது ரசிகர்களுடன் அவர் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இமயமலையிலுள்ள பாபா ஆசிரமத்தில் உள்ள கடையில், புத்தகம் வாங்கும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com