முகப்புகோலிவுட்

'நண்பர்கள் தினம்' - நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்த தளபதி..!

  | August 03, 2020 11:53 IST
Vijay

துனுக்குகள்

  • 2002ம் ஆண்டு முதல், முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் பல சின்னத்திரை
  • அவரோடு இணைந்து நடித்தது மட்டும் அல்ல, கல்லூரி பருவத்தில் இருந்தே இவர்
  • இந்நிலையில் நேற்று இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில்
2002ம் ஆண்டு முதல், முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் பல சின்னத்திரை நாடகங்களில் நடிகராக வளம் வருபவர் தான் சஞ்சீவ் வெங்கட். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வலம்வந்தாலும் அதற்கு முன்பாகவே 1989ம் ஆண்டு பிரபல இயக்குநர் வாசு இயக்கத்தில் வெளியான பொன்மன செல்வன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். தளபதி விஜய் நடிப்பில் ஆரம்பக்காலத்தில் வெளியான சந்திரலேகா, நிலவே வா மற்றும் பத்ரி போன்ற படங்கள் தொடங்கி புதிய கீதை முதல் இன்று மாஸ்டர் படம் வரை பல படங்களில் இவர் அவரோடு இணைந்து நடித்துள்ளார். 

அவரோடு இணைந்து நடித்தது மட்டும் அல்ல, கல்லூரி பருவத்தில் இருந்தே இவர் விஜயின் மிக நெருக்கமான நண்பர் என்பதும் நாம் அறிந்ததே. அண்மைக்காலமாக தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து கல்லூரி நாட்களில் சஞ்சீவ் அவர்கள் எடுத்த பல அருமையான Throwback புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகின்றார். 

இந்நிலையில் நேற்று இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல நண்பர்களுடன் இணைந்து சஞ்சீவ் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் இணைய வழியாக உரையாடி உள்ளனர். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் சஞ்சீவ் அவர்கள்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com