முகப்புகோலிவுட்

“உரிமைக்காக போராடுங்கள்” நடிகர் சித்தார்த் ட்வீட்..!

  | December 19, 2019 14:15 IST
Actor Siddarth

“எத்தனை பேர் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்று பாருங்கள். திசை திருப்புதல், மோசடி, மறுப்பு இவை பாசிஸ்டுகளின் கருவிகள். ஜாக்கிரதை" - நடிகர் சித்தார்த்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுதும் பல போராட்டங்கள் நடிபெற்றுவரும் நிலையில், நடிகர் சித்தார்த் ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் Citizen Amendment Bill-க்கு எதிராக தனது கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அவரின் நேற்றைய ஒரு பதிவில், “முதலில் அவர்கள் முஸ்லிம்களையும், பின்னர் கிறிஸ்தவர்களையும், பிற மதங்களையும் வடிகட்டுவார்கள், பின்னர் அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளை மூலையில் ஒடுக்கி, பெண்களின் உரிமைகளிலும் இதையே பின்பற்றுவார்கள். அவர்கள் எப்போதும் பிரிக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் எப்போதும் வெறுக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். இது தன் அவர்களின் வழி. பாசிசத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்! இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்று கூறியிருந்தார்.
மேலும் மற்றோரு பதிவில், “எத்தனை பேர் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்று பாருங்கள். திசை திருப்புதல், மோசடி, மறுப்பு இவை பாசிஸ்டுகளின் கருவிகள். ஜாக்கிரதை. பாசிசத்திற்கு எதிராக நில்லுங்கள். உரிமைக்காக போராடுங்கள்.!” என்றும் கூறியுள்ளார்.
மேலும், தொடர்ந்து சத்குரு உள்ளிட்ட பலரின் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தும், #CAB2019-க்கு எதிராக தந்து கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார். இவர் கடந்த வாரத்தில், அதிமுகவைச் சேர்ந்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் பெச்சுக்கும் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்