முகப்புகோலிவுட்

நடிகர் சித்தார்த் அமைச்சர் ஜெயகுமாருக்கு பதிலடி..!

  | December 12, 2019 12:17 IST
Cab

துனுக்குகள்

 • சித்தார்த் சமீபத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து கருத்து தெரிவித்தார்.
 • அவர்களெல்லாம் விளம்பரத்துக்காக கேள்விகளை வைப்பார்கள் - ஜெயகுமார்
 • 2014-ஆம் ஆண்டுகான சிறந்த நடிகர் விருது இன்னும் வழங்கவில்லை - சித்தார்த்
நடிகர் சித்தார்த் குறித்து அமைச்சர் ஜெயகுமார் பேசிய வீடியோ இணையதளத்தில் பரவ, அதற்கு சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

சமீபத்தில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “எடப்பாடி பழனிசாமி எனது மாநிலத்தையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதில் ஆழ்ந்த வெட்கமடைகிறேன். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிப்பது, அவரின் உண்மையான வண்ணங்களையும், அவரது ஒருமைப்பாட்டின் பற்றாக்குறையையும், எந்த விலைக்கொடுத்தும் ஆளுமையில் இருக்க வேண்டும் என்ற அவநம்பிக்கையான தேவையையும் காட்டுகிறது. நீங்கள் அனைவரும் இதற்கு பொறுப்பாவீர்கள். அதுவரை உங்கள் தற்காலிக சக்தியை அனுபவிக்கவும் #IndiaRejectsCAB” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, நடிகர் சித்தார்த்தின் கருத்து குறித்து, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது, அவர் “சித்தார்த் யார்., எந்த படத்தில் நடித்திருக்கிறார்?” என்றும் “அவர்களெல்லாம் விளம்பரத்துக்காக சில கேள்விகளை வைப்பார்கள், அவர்களை எல்லால் பெரிய ஆளாக்க விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவ, அதனை டேக் செய்து, நடிகர் சித்தார்த் அமைச்சர் ஜெயகுமாரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அந்தப் பதிவில் “நான் யார் என்று அவர் கேட்கிறார். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது அரசாங்கம் 2014-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கியது. அவர்கள் அதை 2017-இல் தான் அறிவித்தனர், இன்னும் எனக்கு அந்த விருதை வழங்கவில்லை. விளம்பரத்திற்காக நான் பேசத் தேவையில்லை. நான் என் இடத்தை சொந்தமாக சம்பாதித்து வந்திருக்கிறேன். நேர்மையாக” என்று கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில் “அக்கறையுடன் பேசும் வரி செலுத்தும் குடிமக்களை அவமதிப்பது சரியல்ல, குத்துச்சண்டை மாமா. நீங்க ஒன்னும் என்ன பெரிய ஆலு ஆக்கத் தேவையில்லை. உங்கள் வேலையைச் செய்யுங்கள். அது போதும். கெட் வெல் சூன்” என்று பதிலளித்துள்ளார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com