முகப்புகோலிவுட்

சபரிமலைக்கு சென்ற நடிகர் சிம்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..,

  | December 11, 2019 13:24 IST
Actor Simbu

துனுக்குகள்

 • சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
 • இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
 • கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சிம்பு மாலையிட்டு சபரிமலைக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, நடனம், பாடல் என அனைத்து துறைகளிலும் தமிழ் சினிமாவில் கலக்கியவர் சிலம்பரசன். இவர் மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தையடுத்து, வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு' திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் மஹா, மஃப்டி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தனது வெளிப்படையான பேச்சாலும், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளாலும் அடிக்கடி பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது தொடர்கதையாக நடைபெற்றவருகிறது. இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றனர்.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, நடிகர் சிம்பு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். அவர் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு சென்றுள்ளார். அவரின் அந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com