முகப்புகோலிவுட்

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் அளித்த சிவகார்த்திகேயன்..!

  | April 01, 2020 15:09 IST
Sivakarthikeyan

திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்காக சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த நாடு தழுவிய 21 நாள் பூட்டுதலால் அனைத்து வணிகங்களும் பாதிக்கப்படுகின்றன, மேலும் இது பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் என்று வர்த்தக வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதையடுத்து, Coronavirus பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பொதுநல திட்டங்களை அறிவித்துள்ளன. மேலும், பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் வர்த்தகர்கள் நாட்டின் நலனுக்காக பிரதமரின் அவசர நிதியில் பங்களிப்பு செய்துவருகின்றனர்.

தமிழ்நாட்டிலும், மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளுக்கு நிவாரண நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து பலர் தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் தங்கள் பங்களிப்புகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கோலிவுட்டின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

முன்னதாக, FEFSI கூட்டமைப்பின் தலைவர் ஆர். கே. செல்வமணி சங்க உறுப்பினர்களுக்கு உதவுமாறு நட்சத்திரங்களை கேட்டுக்கொண்டதையடுத்து, திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்காக சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com