முகப்புகோலிவுட்

நடிகர் சூரியின் “அம்மன்” உணவகத்தை திறந்து வைத்த சிவகார்த்திகேயன்!

  | November 01, 2019 12:49 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

 • நடிகர் சூரி அம்மன், அய்யன் என்கிற பெயரில் உணவகம் நடத்திவருகிறார்
 • இந்த உணவகத்தை சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்
 • வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சூரி
பல தமிழ் படங்களின் மூலம்  நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார்.
 
“அம்மன்” உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
 
lul9q0u8

 
தற்போது நடிகர் சூரி மேலும் தனது உணவக கிளைகளை பெருக்க வேண்டி “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்குகின்றார்.
 
இந்த புதிய உணவகங்களை சூரியின் உடன் பிறவா சகோதரரான நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (நவம்பர் 1) குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
 
1ci1ha28

 
பல பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையைல் “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
திறப்புவிழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சூரி மற்றும் குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com