முகப்புகோலிவுட்

சூர்யாவால் பாராட்டப்பட்ட மம்முட்டி!

  | February 11, 2019 18:31 IST
Peranbu

துனுக்குகள்

  • ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த திரைப்படம் “பேரன்பு”.
  • , தெலுங்கில் மம்முட்டி நடித்து வெளியான திரைப்படம் “யாத்ரா”.
  • தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை ரசிகர்கள் மனதில் மீண்டும் நிறுவியுள்ளார்
ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த திரைப்படம் “பேரன்பு”.  பிப்ரவரி 1ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  அதேபோல், தெலுங்கில் மம்முட்டி நடித்து வெளியான திரைப்படம் “யாத்ரா”. 

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.  மம்முட்டி நடிப்பில் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களுமே சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இருவேறு கதை களம் கொண்ட இத்திரைப்படங்களில் தனது நடிப்பு திறனை பிரமாதமாக வெளிகாட்டியிருக்கும் நடிகர் மம்முட்டி தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை ரசிகர்கள் மனதில் மீண்டும் நிறுவியுள்ளார். 
 
 
இதுகுறித்து நடிகர் சூர்யா, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, சமீபத்தில் பேரன்பு, தற்போது யாத்ரா ஆகிய இரண்டு படங்களுமே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படியான உண்மையான மற்றும் தூய்மையான படங்களை கொடுத்த படக்குழுவிற்கு நன்றிகளும், பாராட்டுகளும் என தெரிவித்திருந்தார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்