முகப்புகோலிவுட்

'சூர்யாவின் 45வது பிறந்தநாள்' - Common Dp வெளியிட்ட Kollywood பிரபலங்கள்..!!

  | July 12, 2020 07:34 IST
Common Dp For Surya Birthday

துனுக்குகள்

 • சிவகுமார் என்ற சிறந்த நடிகரின் மகனாக 1975ம் ஆண்டு பிறந்தவர் தான்
 • பாலா இயக்கத்தில் நந்தா, அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே போன்ற
 • இந்நிலையில் வரும் ஜூலை 23ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும்
சிவகுமார் என்ற சிறந்த நடிகரின் மகனாக 1975ம் ஆண்டு பிறந்தவர் தான் பிரபல நடிகர் சூர்யா. சினிமா துரையின் மீது கொண்ட காதலால் கடந்த 1997ம் ஆண்டு பிரபல இயக்குநர் வசந்த் நடிப்பில் வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1999ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் தான் தனது மனைவி ஜோதிகா அவர்களுடன் இவர் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலா இயக்கத்தில் நந்தா, அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே போன்ற அடுத்தடுத்து வெளியான வெற்றிப்படங்களால் இவர் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தார். 2006ம் ஆண்டு தனது காதலி பிரபல நடிகை ஜோதிகாவை மணந்தார். 2015ம் ஆண்டு ஜோதிகாவின் 36 வயதினிலே என்ற  தயாரித்ததன் மூலம் தமிழ்  திரையுலகில் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரத்தை எடுத்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் சூரரைப் போற்று என்ற திரைப்படத்தில் சூர்யா தற்போது நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வரும் ஜூலை 23ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவிற்கு தற்போதே வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த ஆண்டு கொரோனா முடக்கத்தால் இணைய வழியில் அவருடைய பிறந்தநாளை கொண்ட முடிவு செய்துள்ள அவரது ரசிகர்கள் பல முன்னணி நட்சத்திரங்களை கொண்டு  நேற்று மாலை சூர்யாவின் பிறந்தநாளுக்கான காமன் dp வெளியிட முடிவு செய்தனர். அதன்படி மாதவன், சிபி உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்கள் அந்த காமன் Dpயை வெளியிட்டனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com