முகப்புகோலிவுட்

மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ!

  | November 22, 2019 14:52 IST
Vaibhav

துனுக்குகள்

 • வைபவ் இரண்டாவது முறையாக கார்த்திக்சுப்புராஜுடன் இணைகிறார்
 • கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்
 • அசோக் வீரப்பன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்
கார்த்திக் சுப்புராஜுடன் இரண்டாவது முறையாக இணையவிருக்கிறார் நடிகர் வைபவ்.
 
பேட்ட படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
 
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு படமும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் மற்றொரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தில் வைபவ் கதாநாயகனாகவும், நட்பே துணை பட நடிகை அனகா கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள்.
 
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஏற்கனவே ‘மேயாதமான்', படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக வைபவ் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக இருந்த அசோக் வீரப்பன் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com