முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை! வலுக்கும் வணிகர்களின் எதிர்ப்பு!

  | November 01, 2019 15:34 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • தனியார் நிறுவன விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடித்தது சர்சையாகியுள்ளது
  • தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது
  • வரும் 5ம் தேதி இந்த போராட்டம் காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது
ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்கள் போராட்டம் வலுக்கிறது.
 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வருபவர் விஜய்சேதுபதி. திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பல்வேறு விளம்பரங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் வணிகர்கள் மத்தியில் தற்போது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
ps29i9

 
நவீனமயமாக்கப்பட்ட பிறகு பெரும்பாலும் பொதுமக்கள் நேரடியாக சென்று வணிகம் செய்யும் முறைகுறைந்து வருகிறது. தற்போது அனைத்து அத்தியாவசியப்பொருட்களும் ஆன்லைன் மூலம் வணிகம் செய்யும் முறை அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.  சிறுகுறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து ஆன்லைன் வணிகத்திற்கு எதிராக  போராடி வருகிறது. இந்நிலையில்தான் விஜய் சேதுபதி நடித்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமூக நலனில் அக்கரையுள்ள நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். மக்கள் செல்வாக்கு நிறைந்த நடிகராகவும் இருக்கிறார். இந்நிலையில் இது போன்ற தனியார் ஆன்லைன் நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் மக்கள் அந்த விளம்பரத்தினை கூடுதலாக கவனிக்கும் நிலை ஏற்படும். விளம்பரம் மூலம் ஆன்லைன் வணிகம் பெருகும் சிறுகுறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் தரப்பினர் கூறுகின்றனர். இந்த விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக விஜய் சேதுபதியின் வீடு முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 5ம் தேதி விஜய்சேதுபதியின் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்ருப்பதாக அறிவித்துள்ளனர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்