முகப்புகோலிவுட்

காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் நடிகர் விஷால் ஆஜர்!

  | June 11, 2019 17:16 IST
Vishal

துனுக்குகள்

 • விஷால் நடிகர் சங்கப் பொதுச்செயலாளராக கடந்த தேர்தலில் தேர்வு ஆனார்
 • நாசர் தலைவர் பொறுப்பை ஏற்றார்
 • கார்த்தி பொருளாளராக பதவி வகித்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம், வேங்கட மங்கலம் கிராமத்தில் சுமார் 26 சென்ட் நிலம் தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு வாங்கப்பட்டு இருந்தது. இந்த இடத்தை கடந்த ஆண்டகளில் தலைவராக இருந்த சரத்குமாரும், பொதுச்செயலாளராகவும் இருந்த ராதாரவியும் விற்றதாக புதிய பொறுப்புக்கு வந்த விஷால் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
 
 
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரத்குமார், ராதாரவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கத் தலைவர் நாசர் காஞ்சீபுரம் காவல் நிலையத்தில் தாக்கல் செய்தார்.
 
இதைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் அவருக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பி இருந்தனர்.
 
இந்நிலையில் நடிகர் விஷால் இன்று மதியம் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்பித்தார்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com