முகப்புகோலிவுட்

தெலுங்கு ஹீரோவுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த விஷ்ணு விஷால்..!

  | April 01, 2020 15:31 IST
Vishnu Vishal

நடிகர் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர், டி.என்.சி.ஏ லீக் ஆட்டங்களில் விளையாடினார்.

நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ். அவர் ராதா மோகன் இயக்கத்தில் ‘கௌரவம்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அதையடுத்து அவர் ஓரிரு தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தற்போது அனைவரையும் போல கொரோனா வைரஸ் காரணமாக நாடு நாடு தழுவிய பூட்டுதலால் வீட்டிலேயே இருக்கிறார்.

இந்நிலையில் அவர் வீட்டிலேயே எதையாவது கற்றுக்கொள்ள விரும்புகிறார் போல தெரிகிறது. எனவே அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு, மேம்படுத்த உதவிக்குறிப்புகளை தருமாறு கேட்டுள்ளார்.

லெக் விக்கெட் யார்க்கரை விளையாட முயற்சிக்கும் அவருக்கு, பல ரசிகர்கள் தங்கள் சொந்த உதவிக்குறிப்புகளைக் பரிந்துரைத்துள்ளனர். அதையடுத்து, திரைப்பட பிரபலங்களில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்படும் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் சிரிஷின் வீடியோவைப் பார்த்து, தனது பேட்டிங் டிப்ஸை கொடுத்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர், டி.என்.சி.ஏ லீக் ஆட்டங்களில் விளையாடினார், ஆனால் காலில் ஏற்பட்ட காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஜீவா' திரைப்படத்திலும் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com