முகப்புகோலிவுட்

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா! மரக்கன்று நட்டு விவேக் கொண்டாட்டம்! 

  | October 15, 2019 16:05 IST
Apj

துனுக்குகள்

 • இன்று அப்துல்கலாமின் 88வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது
 • விவேக் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படத்தில் நடித்துள்ளார்
 • மரக்கன்று நட்டு மாணவ மாணவிகளிடையே விவேக் விழிப்புணர்வு
அப்துல் கலாம் 88வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விவேக் மரகன்று நட்டு விழிப்புணர்வு செய்துவருகிறார்.
தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் விவேக். தன்னுடை படங்களில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளின் மூலம் மக்களுக்கு பல கருத்துகளை கொண்டு சேர்த்தவர் இவர். குறிப்பாக மதத்தின் பெயரால் கடைபிடிக்கப்படும் மூட நம்பிக்கைகள், பிற்போக்கு கருத்துகளை விமர்சிக்கும் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். 

திரைப்படங்களில் நடிப்பதோடு இல்லாமல் இயற்கை பாதுகாப்பு குறித்து பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு செய்து வருகிறார். சமூகவலைதளம், சினிமா மேடைகள் என தனக்கு கிடைக்கும் தளங்களில் எல்லாம் இயற்கை பாதுகாப்பு குறித்து தொடர்ந்தி பேசி வருகிறார் விவேக். விழிப்புணர்வு செய்வதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். 
 
tvu76418


இன்று நாடு முழுவதும் நம் இந்திய தேசத்தின் முன்னால் குடியரசு தலைவராக பதவி வகித்த தமிழகத்தை சேர்ந்த அறிவியல் அறிஞர் அப்துல் கலாமின் 88 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றை தினத்தில் நடிகர் விவேக் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டு மாணவர்களிடையே மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
இளைய தலைமுறைகளின் ஆகச்சிறந்த முன்மாதிரி அப்துல் கலாம் என மாணவர்களிடம் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார் விவேக். தொடர்ந்து மரகன்றுகள் நட்டும் மரம் வளர்ப்பு குறித்து பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com