முகப்புகோலிவுட்

“Memes பசங்க ஐடியா உள்ள பசங்க” பாராட்டி நடிகர் விவேக் ட்வீட்.!

  | May 29, 2020 15:34 IST
Vivek

இந்த ட்வீட்டை நடிகை குஷ்புவும் லைக் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுவருவதோடு, இந்தியாவில் தற்போது ஏகப்பட்ட பிரச்சினைகள் மேலோங்கியுள்ளன. வேலையின்மையால், ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் பசியில் வாடும் கூலித் தொழிலாளிகள், வேறு வழியின்றி குழந்தை குட்டிகள், மூட்டை முடிச்சுகள் அனைத்தையும் கட்டிக்கொண்டு நடந்தே சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள், தொடர்ந்து 3 மாத காலமாக வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்கள், மிகவும் வீழ்ச்சியடைந்துள்ள இந்திய பொருளாதாரம் என ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன.

இதற்கிடையில், இந்தியாவில் தற்போது புதிதாக எழுந்துள்ள பிரச்சினை கதிகலங்கவைந்துள்ளது. முக்கியமாக விவசாயிகளின் நெஞ்சில் இடி இறங்குவது போலான பிரச்சினை இது. கூட்டம் கூட்டமாய் பயிர்கள் அனைத்தையும் தின்றே அழைத்துவிடும் வெட்டுக்கிளியின் பிரச்சினை தான் அது.

உலகில் எது நடந்தாலும் சரி, அதனை சிரிக்கவைக்கும் விதமாகவும் சிந்திக்க வைக்கும் விதமாகவும் வெளிப்படுத்த சமீப காலமாக ஒரு குழு இருக்கிறது. அவர்களுக்குப் பெயர் தான் மீம்ஸ் க்ரியேட்டர்ஸ். இவர்களில் ஒருவர் தற்போது இந்த வெட்டுக்கிளி பிரச்சினையையும், மதுப்பிரியர்களையும் இணைத்து விவேக்கின் பிரபலமான காமெடி சீனை கொண்டு ஒரு மீம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சுவாரஸயமான மீம்ஸைப் பார்த்து அசந்து போன நடிகர் விவேக், அந்த மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!” என்று பாராட்டியுள்ளார். இந்த ட்வீட்டை நடிகை குஷ்புவும் லைக் செய்துள்ளார். மேலும், இந்த மீம்ஸ் தற்போது செம வைரலாகிவருகிறது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com