முகப்புகோலிவுட்

'ஜாக் அண்ட் ஜில்..!!' - பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் நடிக்கும் யோகி பாபு..?

  | May 29, 2020 16:15 IST
Jack And Jill Movie

துனுக்குகள்

 • 1986ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான Nidhiyude Katha என்ற படத்தின்
 • சந்தோஷ் சிவன் தொடக்க காலத்தில் இருந்து ஒளிப்பதிவாளராக மட்டும்
 • இந்நிலையில் மலையாளத்தில் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தை இவர்
1986ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான Nidhiyude Katha என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தான் சந்தோஷ் சிவன். மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிய இவர் 1991ம் ஆண்டு தமிழில் வெளியான பிளாக் பஸ்டர் படமான சூப்பர் ஸ்டாரின் 'தளபதி' படத்தின் மூலம் இங்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து மணிரத்னம் அவர்களின் பல படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

சந்தோஷ் சிவன் தொடக்க காலத்தில் இருந்து ஒளிப்பதிவாளராக மட்டும் இல்லாமல் ஒரு இயக்குநராகவும் செயல்பட்டு பல படங்களை இயக்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் 2001ம் ஆண்டு ஷாருக் கான் நடிப்பில் வெளியான அசோகா இவர் இயக்கத்தில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் தமிழில் ஒளிப்பதிவு செய்த படம் தர்பார். 

இந்நிலையில் மலையாளத்தில் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தை இவர் தற்போது இயக்கி வருகின்றார். பிரபல நடிகை மஞ்சு வாரியர் மற்றும் பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் தமிழில் வெளிவர உள்ள இந்த படம் தமிழில் சென்டிமீட்டர் என்ற பெயரில் வெளிவர உள்ளதாகவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.    
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com