முகப்புகோலிவுட்

'வாடும் நடிகர் சங்க கலைஞர்கள்' - களமிறங்கி உதவிய யோகி பாபு

  | April 09, 2020 16:20 IST
Coronavirus

துனுக்குகள்

  • நடிகர் அஜித் தனது சார்பில் நடிகர் சங்கத்திற்கு சுமார் 25 லட்சத்தை
  • FEFSI தலைவர் ஆர்.கே.சல்வமணி அனைத்து நடிகர்கள், நடிகைகள்
  • பிரபல நடிகர் யோகி பாபு தனது கடமையினை செய்ய தற்போது களமிறங்கி உள்ளார்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் FEFSI உறுப்பினர்களுக்கு உதவுமாறு FEFSI தலைவர் ஆர்.கே.சல்வமணி அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட சகோதரத்துவத்திடம் ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளையடுத்து நடிகர் சிவகுமார், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, யோகி பாபு, என பல நடிகர்கள் பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்துவருகின்றனர். மேலும் நடிகர் அஜித் தனது சார்பில் நடிகர் சங்கத்திற்கு சுமார் 25 லட்சத்தை கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் மத்திய அரசுக்கு 50 லட்சமும் அதே போல மாநில அரசுக்கு (தமிழ்நாடு) 50 லட்சமும் உதவி தொகை வழங்கியுள்ளார். 

இந்நிலையில் பிரபல நடிகர் யோகி பாபு தனது கடமையினை செய்ய தற்போது களமிறங்கி உள்ளார். கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வாடிவரும் தென்னிந்திய நடிகர் சங்க தொழிலாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை நேரடியாக சென்று வழங்கியுள்ளார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com