இப்படத்தை அடுத்து அவர் கைவசம் 5 படங்கள் இருக்கிறது. தற்போது அமலாபால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவைப்போல' படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யூ' சான்றிதழ் அளித்துள்ளது. ‘அதோ அந்த பறவைப்போல' திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பூக்கள் நிரம்பிய குளியல் தொட்டியில் முதுகை காட்டியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அமலாபால். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.