முகப்புகோலிவுட்

சீனுராமசாமி இயக்கத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகும் அஞ்சலி…?

  | April 18, 2019 16:58 IST
Arulnithi

துனுக்குகள்

  • இப்படத்தை சீனுராமசாமி இயக்குகிறார்
  • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • இப்படத்தில் அஞ்சலி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்த பரத் நீலகண்டன் இயக்கத்தில்  அருள்நிதி நடித்திருக்கும் படம் கே13. இந்த படம் விரைவில் திரைக்கு வரைவிருக்கிறது. இந்த நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
 
கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் கதாநாயகி, துணைநடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது,
 
படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மே மாதம் துவங்க இருக்கிறது.
 
யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்