முகப்புகோலிவுட்

“மாற்றங்கள் மெதுவாக நிகழும்” நடிகை அனுஷ்காவின் இதயப்பூர்வமான நீண்ட பதிவு.!

  | June 15, 2020 18:10 IST
Anushka Shetty

தொழில் முன்னணியில் அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்’ பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், பல பிரபலங்கள் துன்ப காலங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணை இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். சுஷாந்த இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும், அவர் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மனநல ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பல பிரபலங்களில், தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். இந்த நேரத்தில் எல்லாவற்றையும் மாற்றவும் தீர்க்கவும் முடியாமல் போகலாம், ஆனால் நாம் எடுக்கும் ஒரு சிறிய அடி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். மாற்றம் என்பது ஒரு மில்லியன் தருணங்களில் ஒரு முறை தான் மெதுவாக நிகழ்கின்றன என்று அவர் கூறினார்.

‘மாற்றம் மெதுவாக நடக்கிறது, மேலும் கற்றுக்கொள்வோம்' என்று தனது புகைப்படத்தை தலைப்பிட்ட அனுஷ்கா, தனது பதிவில் “மிக கனிவாக இருக்க கற்றுக்கொள்வோம்.. புரிந்துகொள்ள கற்றுக்கொள்வோம், அதிக இரக்கமுள்ளவராக இருக்க கற்றுக்கொள்வோம், இன்னும் கொஞ்சம் நேசிக்க கற்றுக்கொள்வோம்.. அதிகம் கேட்க கற்றுக்கொள்வோம்... தொடர்பு கொள்ள கற்றுக்கொள்வோம்... பலவீனமாக இருக்க கற்றுக்கொள்வோம்... வலுவாக இருக்க கற்றுக்கொள்வோம்.. நாம் அனைவரும் உள்ளே உணரக்கூடியவர்களாக இருக்க கற்றுக்கொள்வோம்.. மேலும் அதைத் தழுவி வளர…” கற்றுக்கொள்ள வேண்டுமென பதிவிட்டுள்ளார்.

மேலும் “நாம் மனிதர்கள்... ஒரு புன்னகை, காதுகொடுத்த கேட்டல், மென்மையான தொடுதல், அறியப்படாத மற்றொரு நபருக்கு நாம் இருப்பது நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்…” என பதிவிட்டுள்ளர்.

தொழில் முன்னணியில் அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்' பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com