முகப்புகோலிவுட்

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான கஸ்தூரி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

  | September 22, 2020 01:20 IST
Kasthuri

இது குறித்த ஆழமான தகவல்கள் இனி வெளியே வரலாம் எனத் தெரிகிறது.

பிரபல நடிகை கஸ்தூரி திரைப்படத் துறையில் தான் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சமூக ஊடகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இது எல்லோரயும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக நடிகை பாயல் கோஷ் சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து ட்விட்டரில் சமீபத்தில் கருத்து தெரிவித்தார் நடிகை கஸ்தூரி.

நடிகை பாயல் பதிவிட்ட ட்வீட்டைப் பகிர்ந்த கஸ்தூரி “நடிகை பாயல் கோஷ் அனுராக் காஷ்யப் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். சட்ட பார்வை: உறுதியான அல்லது உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் அவை சம்பந்தப்பட்ட பெயர்களில் ஒருவர் அல்லது அனைனைவரின் பெயரையும் அழிக்கக்கூடும். நல்லதல்ல” என எழுதியிருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு ட்விட்டர் பயனர் கஸ்தூரியிடம் “இது உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நடந்திருந்தால், நீங்கள் இன்னும் சட்டபூர்வமான பார்வையை குறிப்பிடுவீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி “என்ன எனக்கு நெருக்கமான, அது எனக்கே நடந்தது. அது அப்படியே தான் இருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால்” எனப் பதிவிட்டார்.

அவர் வெளிப்படையாக பேசக்கூடியவராகவும், ஒரு வழக்கறிஞராகவும் இருந்தும் கூட, பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ள கஸ்தூரியின் பதில் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதுகருதுகிறார். இது குறித்த ஆழமான தகவல்கள் இனி வெளியே வரலாம் எனத் தெரிகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com