முகப்புகோலிவுட்

‘தலைவர் 168’-ல் இணைந்த ரஜினியின் முன்னாள் கதாநாயகி..! சூப்பர் அப்டேட்..!

  | December 10, 2019 15:29 IST
Thalaivar 168

துனுக்குகள்

  • தலைவர் 168 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
  • இப்படத்தில் கீரத்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
  • இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
ரஜினிகாந்துடன் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை ‘தலைவர் 168' திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

தர்பார் திரைப்படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படத்துக்கு ‘தலைவர் 168' என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ‘பேட்ட' திரைப்படத்துக்குப் போட்டியாக வெளிவந்த ‘விஸ்வாசம்' திரைப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார். மேலும், இப்படத்தை ரஜினியின் எந்திரன், பேட்ட ஆகிய திரைப்படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், பிரபல காமெடி நடிகர் ‘பரோட்டா' சூரி இணைந்துள்ளார். இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேபோல், நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ தகவலை சன் சிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
இப்படி அடிக்கடி ப்ரேக்கிங் தகவல்களை கொடுத்துவரும் சன் பிக்சர்ஸ், தற்போது மேலும் ஒரு சூப்பரான அப்டேட்டை அறிவித்துள்ளது. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் அவருடன் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாகவும் நடித்த மீனா இப்போது ரஜினியின் தலைவர் 168-ல் இணைந்துள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அதண்ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்