முகப்புகோலிவுட்

விஜய்யின் 'பிகில்' கேப்டனுக்கு நயன்தாராவின் பிறந்தநாள் பரிசு! வைரலாகும் புகைப்படம்!

  | November 04, 2019 12:27 IST
Bigil

துனுக்குகள்

 • பிகில் படத்தில் கால்பந்து போட்டியின் கேப்டனாக நடித்தவர் இவர்
 • சமீபத்தில் இவருக்கு பிறந்தநாள் கொண்டாப்பட்டது
 • நடிகை நயன்தாரா இவருக்கு கைகடிகாரம் பரிசளித்துள்ளார்
BIGIL: பிகில் படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்த அமிர்தா அய்யர் பிறந்தாளுக்கு நடிகை நயன்தாரா சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த தீபாவளி பண்டிகை அன்று வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் சிலர் நடிக்க அவர்களுடன் வீராங்கனைகளாக இந்துஜா, ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அமிர்தா அய்யர் உள்ளிடோர் நடித்திருந்தனர். இதில் இந்த கால்பந்து விளையாட்டு அணியின் கேப்டனாக இருந்த அமிர்தா அய்யரின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது அப்போது நடிகை நயன்தாரா அமிர்தா அய்யரின் பிறந்த நாள் பரிசாக கைகடிகாரம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com