முகப்புகோலிவுட்

வரன் கேட்டு வந்து, பின்னர் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்.! நடிகை பூர்ணா வெளிப்படையான அறிக்கை..!

  | June 30, 2020 21:34 IST
Shamna Kasim

இதற்கிடையில் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக, மற்றொரு நடிகை மற்றும் மாடல் உட்பட மூன்று பெண்கள் இதே கும்பலுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகை பூர்ணா ஒரு கும்பலால் பிளாக்மெயில் செய்யப்பட்ட செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து கேரளாவில் மரடு போலீசாரால் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த கும்பல் கோழிக்கோட்டில் உள்ள ஒருவருக்கு திருமண வரன் கேட்டு பூர்ணாவை அணுகியுள்ளது. அவர்களுடன் பூர்ணாவின் குடும்பத்தினர் நட்புறவு கொள்ளத் தொடங்கியபோது, அந்த கும்பல் மீண்டும் அவர்கள் வீட்டிற்குச் சென்று பூர்ணாவை புகைப்படம் மற்றும் வீடியோவை எடுக்கத்தொடங்கியுள்ளது. அதனால், சந்தேகம் அடைந்து அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு பிளாக்மெயில் செய்துள்ளனர். இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய கும்பலின் ஏழு உறுப்பினர்களையும், மணமகனாக வேஷம் போட்ட சூத்திரதாரி முஹம்மது ஷரீஃப் மற்றும் ரபீக் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், அவர் தற்போது தனது அறிக்கையை வெளிப்படையாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், “இந்த சோதனையின்போது எனது அன்பான நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு அளித்த அருமையான ஆதரவுக்கு நன்றி. எனது வழக்கு தொடர்பான சில ஊடகங்களில் உண்மையற்ற சில அறிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். குற்றவாளி மற்றும் கும்பல் குறித்து எனக்குத் தெரியாது, இந்த பிளாக்மெயிலிங் சம்பத்தில் ஒரு பகுதியாக இருப்பதால், என்னை குற்றவாளியுடன் இணைப்பது போன்ற போலி செய்திகளை பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எனது அனைத்து ஊடக நண்பர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

"எங்கள் குடும்பத்தினர் புகார் அளிக்க முடிவு செய்திருந்தனர், ஏனெனில் நாங்கள் போலி பெயர்கள், போலி முகவரிகள், ஒரு திருமண முன்மொழிவுடன் வஞ்சக அடையாளங்களுடன் ஏமாற்றப்பட்டோம், இது எங்களை முற்றிலும் தவறாக வழிநடத்தியது. இது இறுதியில் அச்சுறுத்தலுக்கு வழிவகுத்தது, அதற்காக நாங்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையை அணுக முடிவு செய்தோம். ஒருபோதும், அவர்களின் நோக்கங்கள் என்னவென்று தெரியவில்லை, இன்னும் தெரியவில்லை. தற்போது, எனது புகாருக்குப் பிறகு கேரள காவல்துறை ஒரு சிறந்த வேலையைச் செய்து வருகிறது, மேலும் அவர்கள் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். அதற்காக எனது ஊடக நண்பர்கள் அனைவரையும் விசாரணை முடியும் வரை எனது குடும்பத்தினரை அனுகவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது குற்றவியல் நீதி அமைப்பு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வழக்கு தீர்க்கப்பட்டவுடன் நான் நிச்சயமாக ஊடகங்களை சந்திப்பேன்” என்று கூறினார்.
மேலும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஷம்னா காசிம், “எனது வழக்கின் மூலம், என் சகோதரிகள் இந்த மோசடிகாரர்களை எதிர்த்துப் போராடுவதில் கொஞ்சம் விழிப்புடன் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக, மற்றொரு நடிகை மற்றும் மாடல் உட்பட மூன்று பெண்கள் இதே கும்பலுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com