முகப்புகோலிவுட்

OTT வலைதொடரில் களமிறங்கும் பிரியா ஆனந்த்..!

  | August 01, 2020 20:06 IST
Priya Anand

Sony LIVல் ‘சிம்பிள் மர்டர்’ என்ற இந்தி வலைத் தொடரில் அறிமுகமாகிறார்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரைப்பட நட்சத்திரங்கள் தற்போது பலரும் டிஜிட்டல் தளங்களில் ஒரு படி முன்னேறி, OTT அசல் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர்.

ரம்யா கிருஷ்ணன், நித்யா மேனன், பிரசன்னா, அக்ஷரா ஹாசன், இந்தூஜா, பூர்ணா போன்ற பல நட்சத்திரங்கள் வலைத் தொடர் அரங்கில் நுழைந்த பிறகு, இப்போது நடிகை பிரியா ஆனந்த் டிஜிட்டலில் அறிமுகமாக உள்ளார். அதுவும் இந்தியில் அவரது முதல் வலைத் தொடரை தொடங்கவிருகிறார்.

பிரியா ஆனந்த் தனது வலைத் தொடரை Sony LIV ஓடிடி மேடையில் ‘சிம்பிள் மர்டர்' என்ற இந்தி வலைத் தொடரில் அறிமுகமாகிறார். இதனை, அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்வீட்டில் “21 நாட்களுக்கு மேல் வேலைக்கு திரும்புவதற்கான நல்ல அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன்! இந்தியில் ‘சிம்பிள் மர்டர்' மூலம் எனது டிஜிட்டல் அறிமுகத்திற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு மிகவும் நன்றி. கடுமையான விதிமுறைகளுடன் திரைப்படத் தயாரிப்பின் கூட்டு கலை தொடர்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

பிரியா ஆனந்த் தமிழில் வாமனன் திரைப்பில் அறிமுகமானார். அதையடுத்து, புகைபடம், 180, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, வை ராஜா வை, எல்.கே.ஜி மற்றும் கடைசியாக ஆதித்யா வர்மாவில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, மிர்ச்சி சிவாவுடன் ‘சுமோ' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com