முகப்புகோலிவுட்

தீவிரவாதியாக நடிக்கும் சமந்தா?

  | November 13, 2019 12:53 IST
Actress Samantha

துனுக்குகள்

 • சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ஓ பேபி
 • மன்மதுடு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்
 • 'பேமிலி மேன் 2' இணையத் தொடரில் நடித்து வருகிறார் இவர்
தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து வருகிறர்.
 
சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ஓ பேபி', ‘மன்மதுடு2' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடித்த ‘96' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கல் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 'பேமிலி மேன் 2' என்ற இணைய தொடரில் நடித்து வருகிறார். மனோஜ் பாஜ்பாய் முதன்மை வேடத்தில் நடிக்கும் இந்த இணைய தொடரில் சமந்தா எதிர் மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் இந்த தொடரில் சமந்தா தீவிரவாதியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த தொடரின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்ததால் இரண்டாவது பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com