முகப்புகோலிவுட்

'இன்னும் கொஞ்ச வர்ஷம் தான்' - ஓய்வை அறிவிக்கும் சமந்தா ?

  | February 07, 2020 12:54 IST
Actress Samantha

நான் சினிமாவை விட்டு விலகினாலும் ரசிகர்கள் என்னை மறக்காமல் இருக்கும் அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும்

துனுக்குகள்

  • சினிமாவை பொறுத்தவரை நடிகைகளின் ஆயுள்காலம் என்பது மிகவும் குறைவு
  • சினிமாவை விட்டு விலகியது ரசிகர்கள் அவர்களை மறந்துவிடுவார்கள்
  • ரசிகர்கள் என்னை மறக்காமல் இருக்கும் அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும்
கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 96. இந்த படம் 90's கிட்ஸ் மத்தியில் மட்டும் இன்றி பல வயது ரசிகர்களின் மனதை கவர்ந்தது. விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பின்னர், திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியாக இந்த படம் அமைந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் 'ஜானு' (96 படத்தில் திரிஷா பெயர் ஜானு) என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தில் நடித்ததை பற்றி பேசியுள்ள சமந்தா, தமிழில் வெளியான ‘96' படத்தில் விஜய் சேதுபதியை விட திரிஷா நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு என்ற படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் என்னை நடிக்க தேர்வு செய்ததும் நான் படு குஷி ஆகிவிட்டேன் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலக முடிவுசெய்துள்ளேன் என்று கூறினார். சினிமாவை பொறுத்தவரை நடிகைகளின் ஆயுள்காலம் என்பது மிகவும் குறைவு தான், சினிமாவை விட்டு விலகியது ரசிகர்கள் அவர்களை மறந்துவிடுவார்கள் என்றார். ஆனால் நான் சினிமாவை விட்டு விலகினாலும் ரசிகர்கள் என்னை மறக்காமல் இருக்கும் அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார். தற்போது சமந்தாவின் இந்த அறிவிப்பு அவர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்