முகப்புகோலிவுட்

பவர் ஸ்டாருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சமந்தா..!

  | September 02, 2020 15:55 IST
Powerstar

டோலிவுட்டின் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் தனது 49-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.

டோலிவுட் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நாளை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார், ஏற்கனவே ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியுள்ளன.

கோலிவுட்-டோலிவுட் பிரபல நட்சத்திரம் சமந்தா அக்கினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பிறந்தநாளுக்கு முன்னதாக அவரை வாழ்த்தியுள்ளார். தனது பிறந்தநாள் விருப்பத்தை பகிர்ந்து கொண்ட அவர், அவருக்கு எப்போதும் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என்று வாழ்த்தினார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முற்றிலும் அற்புதமான பவன் கல்யாண் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. மிகுந்த ஞானத்துடன் பெரிய பொறுப்புகள் வருகின்றன. உங்களுக்கு எப்போதும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் பெற  வாழ்த்துகிறேன்” என எழுதினார்.

டோலிவுட்டின் ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண் தனது 49-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு, பவன் கல்யாண் பிறந்த நாள் அவரது வரவிருக்கும் 3 திரைப்படங்களின் சுவையான அப்டேட்களுடன் கொண்டாடப்படவுள்ளது.

பணி முன்னணியில், கடைசியாக தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோருடன் ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் கானப்பட்ட சமந்தா, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com