முகப்புகோலிவுட்

ஏழைகளுக்கு உதவும் இளம் நடிகை சனம் ஷெட்டி.!

  | September 01, 2020 12:31 IST
Sanam Shetty

சனம் ஷெட்டி கடைசியாக சிபி சத்யராஜ் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘வால்டர்’ திரைப்படத்தில் காணப்பட்டார்.

கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ஷனம் ஷெட்டி தனது குடியிருப்புக்கு அருகிலுள்ள திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த  குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக "நம் மக்களின் குரல்" என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கியுள்ளார்.

"நம் மக்களின் குரல்" என்ற அவருடைய சமூக சேவை குழுவும் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற என்ஜிஓ குழுவும் இணைந்து அன்றாட பிழைப்பாளிகளான திருவான்மியூர் குறவர் இனத்தைச் சார்ந்த நூறு குடும்பங்களுக்கு இலவச முககவசங்களும் ரேசன் பொருட்களும் கொடுத்து உதவி உள்ளனர்.

அவரது சமூக சேவைக்கு சோஷியல் மீடியாக்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. மேலும், அவரது புகைப்படங்களும் பிரபலமாகிவருகின்றன.

பணி முன்னணியில், கடைசியாக சிபி சத்யராஜ் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘வால்டர்' திரைப்படத்தில் காணப்பட்ட சனம் ஷெட்டி, வரவிருக்கும் ஹன்சிகா மோத்வானி- சிம்பு நடிக்கும் ‘மஹா' படத்தில் நடித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com