முகப்புகோலிவுட்

விமலுடன் கை கோர்க்கும் ஸ்ரேயா!

  | July 13, 2019 17:55 IST
Vimal

துனுக்குகள்

  • தேவேந்தர் சிங் கில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
  • நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரேயா இப்படத்தில் நடிக்கிறார்
  • இயக்குனர் மாதேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்
விஜய் நடிப்பில்  மதுர, பிரசாந்த நடித்த சாக்லட், விஜய்காந்த்  நடித்த அரசாங்கம், வினய் நடித்த மிரட்டல், திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர் ஆர்.மாதேஷ். இவர் தற்போது விமல் கதாநாயகனாக நடிக்கும் ‘சண்டகாரி' படத்தை இயக்கி வருகிறார்.
 
இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க பிரபு , சத்யன், கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர்,  உமா பத்மநாபன் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மாவீரன் படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ”மை பாஸ்” என்ற படத்தை தழுவி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
அம்ரீஷ் இசை அமைக்கும் இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ‘முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது' என இயக்குனர் மாதேஷ் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்