முகப்புகோலிவுட்

‘சில்லுக் கருப்பட்டி’ ஷூட்டிங்கிலிருந்து சுவாரசியமான த்ரோபேக் ஃபோட்டோவை பகிர்ந்த சுனைனா.!

  | September 09, 2020 12:25 IST
Sillu Karuppatti

‘சில்லுக்கருப்பட்டி' திரைப்படம், நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும்.

நடிகை சுனைனா தனது ‘சில்லுக் கருப்பட்டி' படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு வேடிக்கையாக த்ரோபேக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சுவாரசியமான புகைப்படத்தில் இயக்குநர் ஹலிதா ஷமீம், சுனைனா மற்றும் ஹைலைட்டாக பெண் உதவி இயக்குநர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். 

அந்த புகைப்படத்தில் சுனைனாவுக்கு ஒரு காட்சியை விளக்கும் இயக்குநர் ஹலிதா, படத்தின் உதவி இயக்குநர் கேமராவுக்கு முன்னால் வராமல் பின்னால் ஒரு ஓரமாக அமர்ந்துள்ளார்.

சுனைனா இந்த பதிவில் “எங்கள் ஃபேப் உதவி இயக்குநர் அலெக்சாவை இயக்க மறைந்து காத்திருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் 2D Entertainment வெளியிட்ட ‘சில்லுக்கருப்பட்டி' திரைப்படம், நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஹலிதா ஷமீம் எழுதி இயக்கியுள்ளார். Divine Productions சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு மேயாத மான் படத்துக்கு இசையமைத்த பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படம், கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான 2-வது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com