முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டார் வில்லனுடன் ஜோடி சேறும் தமன்னா!

  | November 11, 2019 15:34 IST
Tamanna

துனுக்குகள்

  • விஷால் நடிப்பில் வெளியாகும் ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார் தமன்னா
  • இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கும் படத்தில் நடிக்கிறார் இவர்
  • ஆக்ஷன் படம் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகர் தமன்னா. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஆக்‌ஷன் படம் நவம்பர் 15-ந் தேதிதிரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நடிகை தமன்னா விஷாலுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.
 
இதேபோல் இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘தட் இஸ் மகாலட்சுமி' படத்திலும் தமன்னா நடித்து முடித்துள்ளார். இப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில், நடிகை தமன்னா இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கி வருகிறார். நடிகை தமன்னா ஏற்கனவே சில இந்தி படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவை பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். இந்த படத்தின் மூலம் இந்தி திரையுலகில் தன் இருப்பை தமன்னா தக்க வைத்துக்கொள்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்