முகப்புகோலிவுட்

திருமணம் குறித்து மனம் திறந்த த்ரிஷா…!

  | March 22, 2019 14:01 IST
Trisha

துனுக்குகள்

  • விஜய் சேதுபதியோடு 96 படத்தில் இவர் நடித்திருந்தார்
  • 96 திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது
  • இந்த படத்தில் இடம் பெற்ற காதலே காதலே பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. சமீபத்தில் விஜய் சேதுபதியோடு இவர் நடிப்பில் உருவான 96 திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் பல விருதுகளையும் குவித்து வருகிறது. தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷாவின் இயல்பான நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

த்ரிஷாவுடைய திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் ஏற்படுவது உண்டு. சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசிய அவர், 'இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்