முகப்புகோலிவுட்

விஜயகாந்த் மகனுக்கு திருமணம்! கோவையில் முடிந்தது நிச்சயம்..!

  | December 09, 2019 12:00 IST
Vijaya Prabhakaran

விஜய பிரபாகரனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தம்பதியினருக்கு சன்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவர்களில் மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கும், கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகளான கீர்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் பறவிவருகிறது.

விஜய பிரபாகரன் பிரீமியர் பேட்மிண்டன் லீக்கில் ‘சென்னை ஸ்மாஷர்ஸ்' அணியின் உரிமையாளராவார், மேலும் ‘தி வோனஸ் கென்னலல்ஸையும் நடத்தி வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கோவையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நெருங்கிய நன்பர்கள் மற்றும் குடும்ப உருப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்நிகச்சியில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com